ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் பார்கின்சன் நோயால் பாதிப்பு

Aadmika
Jul 01, 2023,03:49 PM IST
சிட்னி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஆலன் பார்டர், தான் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆலன் பார்டர், 1978 ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 30 சதங்கள், 102 அரை சதங்களை விசாளி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 க்கும் அதிகமான ரன்களை கடந்த முதல் வீரர் இவர் தான். இவரது சாதனையை தான் பிரையன் லாரா முறியடித்துள்ளார். 



தற்போது தனக்கு 68 வயதாவதாகவும் 80 வயது வரை நான் வாழ்ந்தால் அது மிகப் பெரிய அதிசயமாக இருக்கும். ஆனால் 100 வயது வரை நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்பது எனக்கு உறுதியாக தெரியும் என தெரிவித்துள்ளார். 2016 ம் ஆண்டே இந்த பற்றி எனக்கு தெரியும். யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தேன் என தெரிவித்துள்ளார்.  

ஆலன் பார்டரை கவரவிக்கும் விதமாகத் தான் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. ஆலன் பார்டர், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.