நடிகர் வடிவேலுவின் தாயார் மரணம்.. ரசிகர்கள் இரங்கல்!

Baluchamy
Jan 19, 2023,01:06 PM IST

மதுரை: வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நடிகர் வடிவேலுவின் தயார் சரோஜினி அம்மாள் காலமானார்.


தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. தனது காமெடியான நடிப்பினால் கோடானகோடி தமிழ் மக்களை தினந்தோறும் சிரிக்கவைத்து வருகிறார்.


'என் ராசாவின் மனசிலே' படத்தில் அறிமுகமாகி தற்போது காமெடி ராஜாவாக ஜொலித்து வரும் வடிவேலு மதுரையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.


வடிவேலுவின் தயார் சரோஜினி (87) வயது உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மதுரை விரகனூரில் மரணம் அடைந்தார்.


வடிவேலு தாயாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வடிவேலுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.