நாங்க பேசுறத காட்டுறதே இல்ல...ஈபிஎஸ் குற்றச்சாட்டால் வந்த அதிரடி உத்தரவு

Aadmika
Apr 12, 2023,11:39 AM IST
சென்னை : சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசுவது மற்றும் அவர்கள் கொண்டு வரும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த பேச்சுக்கள் நேரலையில் காட்டப்படுவதில்லை என அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு உரையை நேரலை செய்வதில் உள்நோக்கத்துடன் திமுக அரசு செயல்படுவதாகவும், குறிப்பாக தான் பேசுவது காட்டப்படுவதே இல்லை என்றும் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவரின் இந்த குற்றச்சாட்டிற்கு சட்டசபை சபாநாயகர் அப்பாவு சபையில் விளக்கம் அளித்தார். அதில், நேரலை வழங்குவதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என அவர் தெரிவித்தார். மேலும், சட்டசபை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் அனைத்தும் இனி நேரலை செய்யப்படும் என தெரிவித்தார்.
 


பேரவையி நடுநிலையாக செயல்படுவதில்லை. சபாநாயகர் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுகிறார். சிறுமிக்கு ஏற்பட்ட நிலை பற்றி சட்டசபையில் நசன் பேசியதை நேரலையில் ஒளிபரப்பவில்லை. முதல்வர் அளித்த பதில், எனக்கு முன்பு பேசியவர்கள், எனக்கு பின்பு பேசியவர்களின் பேச்சுக்கள் நேரலையில் ஒளிபரப்பாகிறது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். 

நேரலை பேச்சுக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து அவையில் விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, கவன ஈர்ப்பு தீர்மானங்கள் உள்ளிட்ட அனைத்து பேச்சுக்களும் நேரலை செய்யப்படும் என உறுதி அளித்தார்.