ஆர்ஆர்ஆர் பட நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது...95 வது ஆஸ்கார் விருதுகள் முழு விபரம் இதோ

Aadmika
Mar 13, 2023,11:17 AM IST

லாஸ் ஏஞ்சல்ஸ் : 95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில்  அதிகபட்சமாக Everything Everywhere all at once திரைப்படம் 7 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை கீரவாணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து எடுக்கப்பட்ட ஆவண படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைக்கதை ஆகிய 7 பிரிவுகளில் Everything Everywhere all at once படம் விருது வென்றுள்ளது.


95 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இந்திய திரையுலகை சேர்ந்த ஆர்ஆர்ஆர் படக்குழுவினர், பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆஸ்கார் விருது வென்றவர்கள் முழு விபரம் இதோ :




சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது - கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ

சிறந்த ஆவண படம் - Navakny

சிறந்த ஆவண குறு��்படம் - The Elephant Whisperers

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் - Avatar : The Way of Water

சிறந்த சர்வதேச படம் - All Quiet On the Western Front

சிறந்த இசை - All Quiet On the Western Front

சிறந்த ஒ���ிப்பதிவு -  All Quiet On the Western Front

சிறந்த புரோடெக்ஷன் டிசைன் - All Quiet On the Western Front

சிறந்த திரைக்கதை - Everywhere All at Once

சிறந்த இசையமைப்பாளர் - கீரவாணி (ஆர்ஆர்ஆர் - நாட்டு நாட்டு)

சிறந்த பாடலாசிரியர் - சந்திரபோஸ் (ஆர்ஆர்ஆர்)

சிறந்த நடிகர் - Brendan Fraser

சிறந்த நடிகை - Michelle Yeoh

சிறந்த படம் - Everything Everywhere all at once