"மழை வருது.. மழை வருது".. இன்று 9 மாவட்டங்களில் சிலுசிலுன்னு!

Su.tha Arivalagan
Sep 04, 2023,02:14 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு திசை காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று பரவலாக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பம் குறைந்து தற்போது குளிர்ச்சி நிலவுகிறது. 



இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகத்தின் மாறுபாடு காரணமாக இன்று பரவலாக ஒன்பது மாவட்டத்தில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருப்போரூரில்  அதிகபட்சமாக 9 சென்டிமீட்டர் மழையும், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி ,திண்டுக்கல் ,தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உட்பட ஆகிய 9 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.