வைட்டமின் "ஏ" கிடைக்க சாப்பிட வேண்டிய 7 சத்தான உணவுகள்
Mar 26, 2023,05:06 PM IST
சென்னை : வைட்டமின் ஏ சத்தின் அளவு சரியான விகிதத்தில் இருந்தால் மட்டுமே நமது கண்பார்வை சரியாக இருக்கும். வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் விழித்திரையில் பல விதமான பாதிப்புக்கள் ஏற்படும். இளம் வயதிலேயே பார்வை குறைபாடு வருவதற்கு வைட்டமின் ஏ பற்றாக்குறையே முக்கிய காரணமாகும்.
உடலில் ஏற்படும் வைட்டமின் ஏ குறைபாட்டை சரி செய்வதற்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய 7 ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல் இதோ...
1. சர்க்கரைவல்லி கிழங்கு :
ஒரு கப் அளவிற்கு தினமும் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கினை சாப்பிட்டால் 216 சதவீதம் அளவிற்கான வைட்டமின் ஏ கிடைக்கும்.
2. சிவப்பு மிளகாய் :
தினமும் சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால் ரெட்டினா எனப்படும் விழித்திரை படலத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் வராது.
3. முலாம்பழம் :
தினமும் ஒரு கப் முலாம்பழம் சாப்பிடுவதால் 270 மில்லி கிராம் அளவிலான வைட்டமின் ஏ சத்து கிடைக்கிறது. உணவில் 30 சதவீதம் அளுவிற்கானது தினமும் முலாம்பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது என டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
4. கல்லீரல் :
ஆட்டின் கல்லீரல் சாப்பிடுவதால் வைட்டமின் ஏ மட்டுமின்றி வைட்டமின் பி 12 அளவும் உடலில் அதிகரிக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். தினமும் 100 கிராம் அளவிற்காவது கல்லீரல் சாப்பிட்டால் ரெட்டினாலுக்கு தேவையான 7730 மைக்ரோ கிராம் சத்துக்கள் கிடைத்து விடும் என்கிறார்கள்.
5. வெண்ணெய் :
14 கிராம் வெண்ணெயில் 96 மைக்ரோ கிராம் அளவிற்கு வைட்டமின் ஏ உள்ளது. அதனால் தான் தினமும் உணவில் வெண்ணெய், நெய் போன்ற பால் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
6. காலே :
சமைத்த 118 கிராம் காலேயில் 172 மைக்ரோ கிராம் ரெட்டினால் உள்ளது. இது வைட்டமின் ஏ குறைபாட்டை சமன் செய்கிறது.
7. மாம்பழம் :
பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழம் உடலுக்கு மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. குறிப்பாக பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாம்பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 165 கிராம் அளவிற்கான மாம்பழத்தில் 83 மைக்ரோ கிராம் அளவிலான வைட்டமின் ஏ உள்ளது.