கடலில் கவிழ்ந்த பைபர் படகு... 6 மீனவர்கள் மீட்பு!
Sep 23, 2023,02:28 PM IST
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடலில் கவிழ்ந்த பைபர் படகில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திருச்செந்தூர் கடலில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க படகில் சென்றனர். மீன்பிடித்து கரை திரும்பும் போது ராட்சத அலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிக் கொண்டிருந்தன. திடீரென்று எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் படகு மோதி கவிழ்ந்தது. இதில் ஒரு படகில் இருந்த 6 மீனவர்கள் கடலுக்குள் விழுந்து தத்தளித்தனர்.
தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் கடலில் விழுந்த மீனவர்களை ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில் படகில் உள்ள ரூபாய் 3.5 லட்சம் வலைகள் கடலில் விழுந்து நாசமாகின. படகு எஞ்சின்கள் சேதம் அடைந்தது. இதனால் மீனவர்கள் சோகத்துடன் கரைக்கு திரும்பினர்.