6 State Assembly elections 2024.. 6 மாநில சட்டசபைத் தேர்தலுக்கும்.. இன்றே தேதி சொல்றாங்க!

Aadmika
Mar 16, 2024,11:23 AM IST

டில்லி : 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் தேதி அட்டவணையை இன்று (மார்ச் 16) மாலை 3 மணிக்கு நடைபெற உள்ள பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் வெளியிட உள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் இன்னும் சில முக்கிய அம்சங்களும் இடம்பெறவுள்ளது.


அதாவது 6 மாநில சட்டசபைத் தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளது.  இன்று வெளியிடப்படும் லோக்சபா தேர்தல் அட்டவணையுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 




ஆந்திராவில் தற்போது  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.  ஒடிஷாவில் பிஜூ ஜனதாதளம், மகாராஷ்டிராவில் சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஹரியானாவில் பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது.  சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணிகளையும், தொகுதிப் பங்கீட்டையும் கூட அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் முடித்து விட்டனர்.


இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விடும். இதனால் பிரச்சாரம் செய்பவர்கள் பிற கட்சிகளை அவமதிக்கும் விதத்திலோ, அவதூறு பரப்பும் விதத்திலோ, சாதி அல்லது மத உணர்வுகளை மக்களிடையே தூண்டாத வகையிலும் இருக்க வேண்டும். இந்த விதிகளை மீறு அரசியல் கட்சிகள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும். இது குறித்த அறிவிப்பையும் தேர்தல் கமிஷன் இன்று வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


2019 ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி, மே 19 ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த முறையும் அதே போல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.