சென்னையில் இன்று மாலை தொடங்குகிறது 48வது புத்தக கண்காட்சி.. ஜனவரி 12 வரை வாசிப்பு விருந்து!

Meenakshi
Dec 27, 2024,06:22 PM IST

சென்னை: 48வது புத்தகக் கண்காட்சி  நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது.


தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் இன்று தொடங்கும் 48வது புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. விஷ்ணுபுரம் அரங்கு எண் 205 - 206ல் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ள தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்கின்றனர்.


புத்தக கண்காட்சி  விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெரும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  கண்காட்சியில் 900 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்கப்பட உள்ளன. 




ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் மற்றும் பொற்கிழி விருதுகள் வழங்கிப்  பட உள்ளன. 


அந்த வகையில், இந்தாண்டிற்கான முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது பேராசிரியர் அருணன், நெல்லை ஜெயந்தா, சுரேஷ்குமார் இந்திரஜித், என்.ஸ்ரீராம், கலைராணி, நிர்மால்யா ஆகிய  6 பேருக்கும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்