அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
Feb 26, 2025,05:25 PM IST
சென்னை: முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் வரும் மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய முதல்வர் மு க ஸ்டாலின் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட வரும் மார்ச் ஐந்தாம் தேதி அனைத்து கட்சிகளின் கூட்டம் நடைபெறும். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளை மத்திய அரசு குறைக்க பாக்கிறது. தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தென் மாவட்டங்கள் வஞ்சிக்கப்படுகிறது எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மார்ச் ஐந்தாம் தேதி நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 11 வது இடத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 17-வது இடத்திலும், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 23 வது இடத்திலும், நாம் தமிழர் கட்சி 24-வது இடத்திலும் உள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட 45 கட்சிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு,
1.திராவிட முன்னேற்றக் கழகம்
2.இந்திய தேசிய காங்கிரஸ்
3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
7.விடுதலை சிறுத்தைகள் கட்சி
8.மனிதநேய மக்கள் கட்சி
9.அகில இந்திய பார்வர்டு பிளாக்
10.தமிழக வாழ்வுரிமை கட்சி
11.மக்கள் நீதி மய்யம்
12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
13.ஆதி தமிழர் பேரவை
14.முக்குலத்தோர் புலிப்படை
15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
16.மக்கள் விடுதலை கட்சி
17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
18.பாட்டாளி மக்கள் கட்சி
19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)
20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்
21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
22.பாரதிய ஜனதா கட்சி
23.தமிழக வெற்றிக் கழகம்
24.நாம் தமிழர் கட்சி
25.புதிய தமிழகம்
26.புரட்சி பாரதம் கட்சி
27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
28.புதிய நீதிக் கட்சி
29.இந்திய ஜனநாயகக் கட்சி
30.மனிதநேய ஜனநாயகக் கட்சி
31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி
32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
33.பெருந்தலைவர் மக்கள் கட்சி
34.அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்
35.பசும்பொன் தேசிய கழகம்
36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்
37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி
38.கலப்பை மக்கள் இயக்கம்
39.பகுஜன் சமாஜ் கட்சி
40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை
41.ஆம் ஆத்மி கட்சி
42.சமதா கட்சி
43.தமிழ்ப்புலிகள் கட்சி
44.கொங்கு இளைஞர் பேரவை
45.இந்திய குடியரசு கட்சி