ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு

Meenakshi
Jul 23, 2024,03:44 PM IST

டெல்லி:  2024-25ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


மத்திய பட்ஜெட்  ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம்  தாக்கல் செய்யப்படும். இந்த முறை மக்களவைத் தேர்தல் காரணமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டும் தாக்கல் செய்தார். அப்போது அவர் அடுத்த முறை ஆட்சி அமைத்த பின்னர் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி 3வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.




இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் , சுமார் ஒரு கோடி வீடுகளின் மேற்கூரைகளில் சோலார் தகடுகள் நிறுவப்பட்டு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இத்திட்டத்தில் 1.28 கோடி பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இத்திட்டம் செயல்படுத்துவதன் மூலமாக மின்சாரம் தேவை குறையும் என்றும், மின்பற்றாகுறையும் சரி செய்யப்படும்கிறது. மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இதன் பங்கு இன்றியமையாததாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2024-25ம்  நிதியாண்டில் அரசின் நிதிப்பற்றாக்குறை 4.9 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.