ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி.. அக்டோபர் 1 முதல்!

Aadmika
Aug 03, 2023,02:33 PM IST
டெல்லி : அக்டோபர் 01 ம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இது கண்டிப்பாக அக்டோபர் 01 முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், டெல்லி, கோவா, ஆந்திரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள வரியை சீராய்வு செய்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 6 மாதம் கண்காணித்த பிறகு வரிகளை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். ஆறு மாதத்திற்கு பிறகு இதை அமல்படுத்த உள்ளோம்.



ஆன்லைன் விளையாட்டுக்கள், கேசினோஸ் ஆகியவற்றில் நுழைந்தது முதல் உங்களுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்படும். ஜூலை 11 ம் தேதி நடந்த கூட்டத்திலேயே குதிரை ரேஸ் உள்ளிட்டவைகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி அமல்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிகள் கொண்டு வரவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருந்தாலும் தங்களின் முடிவில் மாற்றமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டமிட்டுள்ளதை போல் அக்டோபர் 01 முதல் இந்த புதிய வரி அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.