பாட்னாவில் 15 கட்சிதான்.. இப்போது 26.. பெங்களூரை கலக்கப் போகும் எதிர்க்கட்சிகள் சந்திப்பு!
Jul 17, 2023,10:25 AM IST
பெங்களூரு: பெங்களூரில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டத்தில் 26 கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருகிற லோக்சபா தேர்தலை எப்படி சந்திப்பது, பாஜகவை எப்படி வீழ்த்துவது என்ற முஸ்தீபுகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. தேர்தலை சந்திப்பதற்கு முன்பு எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை அவை தொடங்கியுள்ளன.
காங்கிரஸ் தலைமையில் செயல்பட சில கட்சிகளுக்கு தயக்கம் உள்ளது. அதேசமயம் தனியாக செயல்படவும் அவர்களுக்குத் தைரியம் இல்லை. இந்த நிலையில்தான் எங்களது தலைமை முக்கியம் இல்லை. அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதே முக்கியம் என்று காங்கிரஸ் பெருந்தன்மையுடன் கூறி விட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 23ம் தேதி பாட்னாவில் முதல் எதி��்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது 2வது கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் அறிவித்தது. இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும்இடையே நிலவி வந்த பூசல் ஓயும் என்று தெரிகிறது.