மணிப்பூரில் தலைவிரித்தாடும் கலவரம், வன்முறை.. இதுவரை 219 பேர் உயிரிழப்பு

Meenakshi
Feb 29, 2024,04:56 PM IST
மணிப்பூர்: மணிப்பூர் ஆளுநர் அனுசுயா  வன்முறையில் இதுவரை 219 பேர் உயிரிழந்ததாக சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில்  கடந்த மே மாதம் முதல்   மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே வன்முறை மோதல் நடைபெற்று வருகிறது.மைதேயி சமூகத்தினர் தங்களுக்கும் பழங்குடினர் அந்தஸ்து கோரி வருகின்றனர். அதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்குள் மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை பல நாட்களாக நடைபெற்று வருகிறது.

இரு பிரிவினர்களிடையே ஏற்றபட்ட மோதல் பூதாகரமாக உருவெடுத்தது. இரு பிரிவினர்களும் தீவிரவாதக் குழுக்களும் ஆயுதம் ஏந்தி தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதனால்,  இக்குழுக்களின் மோதலில் உயிர் சேதமும், பொருட் சேதமும் அதிகரித்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.வன்முறை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.



இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பட்ஜெட்  கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் அனுசுயா உய்கே உரையாற்றினார். அப்போது,மணிப்பூர் வன்முறையில் இதுவரை 219 பேர் இறந்துவிட்டனர். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

உரிய சரிபார்ப்புக்கு பிறகு நிவாரண நிதி வழங்கப்படும். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க 198  மத்திய ஆயுதக் காவல் படையினரும், 140  ராணுவத்தினரும் பணியில் உள்ளனர். 10,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 800 கோடி ரூபாய் இழப்பு எனவும் அறிவித்துள்ளார் அவர்.