அதிரடியாக சவரனுக்கு ரூ.840 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Meenakshi
Mar 28, 2025,11:53 AM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ஒரு சவரன் ரூ.66,720க்கு விற்கப்பட்டு வருகிறது.


கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் வைத்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி, உக்ரைன்-ரஷ்யா போர், காசா-இஸ்ரேல் போர் போன்ற காரங்களால் தங்கத்தின் மீதான முதலீடு தற்போது உயர்ந்து வருகிறது. இதனால் தங்கம் விலை கிடுகிடு வென உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த விலை மேலும் உயரும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (28.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,098 க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 66,720 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.83,400 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,34,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 9,098 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.72,784ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.90,980ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.9,09,800க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,113க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,340க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,098க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,345க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.9,103க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,789

மலேசியா - ரூ.8,228

ஓமன் - ரூ. 8,107

சவுதி ஆரேபியா - ரூ.7,921

சிங்கப்பூர் - ரூ. 8,184

அமெரிக்கா - ரூ. 7,921

கனடா - ரூ.8,136

ஆஸ்திரேலியா - ரூ.8,169


சென்னையில் இன்றைய  (28.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.3 உயர்ந்துள்ளது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 114 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 912ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,140ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,400 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,14,000 ஆக உள்ளது.