அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.58,000த்தை கடந்தது

Meenakshi
Jan 03, 2025,12:31 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,260க்கும், ஒரு சவரன் ரூ.58,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31ம் தேதி சவரனுக்கு ரூ.200 குறைந்திருந்த தங்கம், புதுவருடம் தொடங்கிய நாளில் இருந்து உயர்ந்து வருகிறது. ஜனவரி 1ம் தேதி சவரனுக்கு ரூ.200ம், ஜனவரி 2ம் தேதி சவரனுக்கு ரூ.150ம் ஆக உயர்ந்திருந்த தங்கம் இன்று  மீண்டும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து அதிரடி காட்டி வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் சவரன் ஒரு லட்சத்தை தொட்டு விடுமோ என்று வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். 


சென்னையில் இன்றைய (03.01.25) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,260க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,180க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 58,080 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.72,600 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,26,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,920 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,360 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.79,200 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,92,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,260கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,920க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,275க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,935க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,920க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,920க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,920க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,260க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,920க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,265க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,925க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,750

மலேசியா - ரூ.6,922

ஓமன் - ரூ. 7,072

சவுதி ஆரேபியா - ரூ.6,919

சிங்கப்பூர் - ரூ.6,800

அமெரிக்கா - ரூ. 6,689

துபாய் - ரூ.6,970

கனடா - ரூ.7,107

ஆஸ்திரேலியா - ரூ.6,653


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்து ரூ.100க்கு விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்