2025ல் இயற்கை கோரத்தாண்டவமாடும்.. அரசியல் கலகங்கள் தலைதூக்கும்.. ஜோதிடர் சிவ.ச நடராஜ தேசிகர் கணிப்பு

Manjula Devi
Dec 12, 2024,06:09 PM IST

சென்னை:  2025 ஆம் ஆண்டில்  இயற்கையின் கோரதாண்டவம் மிகக் கடுமையாக இருக்கும். தமிழ்நாட்டில் அரசியல் கலகங்கள் தலை தூக்கும் என ஜோதிட கலைமாமனி திருவிடைமருதூர் ஜோதிடர் சிவ.ச நடராஜ தேசிகர் கணித்துள்ளார்.


2024ம் ஆண்டு முடிவடைந்து 2025ம் ஆண்டு பிறக்கப் போகிறது. புது வருடம் எப்படி இருக்கும் என்று பலரும் கணித்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில், இந்த புது வருடத்தில் மழையின் தீவிரம் எப்படி இருக்கும் .. தமிழ்நாட்டு அரசியலில் என்னென்ன  மாற்றம் நிகழப்போகிறது ..என்பது குறித்து திருமுறை கலைக்களஞ்சியம் தெய்வத் தமிழிசை, அறிஞர் சைவ சமய புரட்சியாளர், ஜோதிட சாஸ்திர துறையில் சாதனையாளர் விருதினை பெற்ற ஜோதிடக் கலைமாமணி முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச. நடராஜர் தேசிகர் நம்மிடையே பகிர்ந்துள்ளார்‌.


2025ம் ஆண்டு குறித்து அவர் கணித்துக் கூறியுள்ள சில விஷயங்கள்:

 


- வரும் 2025, ஆம் ஆண்டு இறுதிக்குள், உலகப்போர் வர இருக்கிறது. பலநாடுகளுக்கு பேராபத்துகள் ஏற்படும்.


- தமிழகத்தில், பல பகுதிகளும், இலங்கையும், நீரினால் மிதக்கும் அபாயம். தொடர்ச்சியாக வரும் காலங்களில் இராவண பூமியான இலங்கை பேரழிவுகளை சந்திக்கும்.


- இயற்கையின் கோரதாண்டவம் மிகக் கடுமையாக இருக்கும்.


- வரும் ஆண்டில்.அரசியல் கலகங்கள் தமிழ்நாட்டில் தலைதூக்கும்.


- அண்டார்டிக் கடலில் பனிப்பாறைகள் கிட்டத்திட்ட 75% சதவிகிதம் உருகிவிட்ட நிலையில், மேலும் எஞ்சிய பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருவது கடல்நீர்மட்டம் உயரும் அபாயம்.


- புதிய, புதிய, வைரஸ்களால் மருத்துவத்தால் எளிதில் நீக்கமுடியாத பெருநோய்கள் வருவதற்கான சாத்திய கூறுகள் ஆரம்பமாகும்.


- இயற்கையின் பேராபத்துகள் அனைத்தையும் முன்கூட்டியே அறிவிப்புகள் கொடுத்தாலும், அவைகளில் சில விஞ்ஞானத்திற்கு எட்டாமல் பொய்த்து போகும்.


- வரும் ராகு, கேது, பெயர்ச்சியும் நீரினால், நிலத்தினால், நெருப்பினால், காற்றினால், பல இயற்கை பாதிப்புகள் உலக நாடெங்கும் வர இருக்கின்றன. இனி வரும் ஆண்டில் விஞ்ஞானிகள் எவராலும் அறுதியிட்டு சொல்லாத, சொல்ல முடியாத செயல்கள் யாவும் 2030,ஆம் ஆண்டுக்குள் பல பேரழிவுகளை உலக நாடுகள் அனைத்தும் சந்திக்கும்.


இதற்கெல்லாம் காரணம், ஆன்மீகம் என்ற பெயரில் அனைத்துமே கமர்ஷியல் வணிக வியாபாரமாக ஆழமாக வேரூன்றி விட்டன. இனி எவராலும் ஒன்றும் செய்யமுடியாது. அறவாணர்கள் இறைவனால் அடையாளம் காட்டப்பட்டு ஆட்கொள்ளப்படுவர். அறம் என்பதை 90% சதவிகிதம் நாம் இழந்து விட்டோம். ஆகையால் தொடர்ச்சியாக இயற்கையின் கோரப்பிடியில் அனைவருமே தவிக்கும் நிலை ஏற்படும் என கூறியுள்ளார்.


மேலும் இதற்கெல்லாம் தீர்வு என்பது அறம் தழுவிய  சிவவழிபாடும், திருமுறையும், நமது இறை நாயன்மார்களின் வழி நடப்பதுவுமே நம்மை காப்பாற்றும். இதை உணராது வாழ்பவர்களுக்கு காலம் கண்டிப்பாக தக்க பாடத்தை கற்றுத்தரும். நமது இறை நால்வர் பெருமக்களின் அறவழி நேர்நின்று அவர்கள் காட்டிய அருட்பாதையில் பயணிப்போர்களுக்கு எந்நாளும் இன்பமே நன்றி என்று கூறியுள்ளார்.


நடப்பாண்டில்  வங்கக்கடலில் ரிமால், டானா, ஃபெஞ்சல், என  3 புயல்கள் உருவாகின. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டும் 2 புயல்கள் உருவாகின. அதில் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால்  நவம்பர் மாத இறுதியில் உருவான ஃபெஞ்சல் புயல் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்த அதி கனமழையால் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல பகுதிகள் சேதத்தை சந்தித்தன. 


கடந்த ஆண்டு நீரினால் தமிழ்நாடு பெரும் சேதத்தை சந்தித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த ஆண்டு முடிவடைய இன்னும் 18 நாட்கள் உள்ள நிலையில் நல்லபடியாக இந்த ஆண்டை முடிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையே அனைவரிடமும் உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்