விண்ணைத் தொட்டு வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கத்தின் தேவை அதிகரிப்பதன் காரணமாக, உலகின் பல பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு தங்கம் அனுப்பப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பே லண்டன் மற்றும் உலகின் பிறப்பகுதிகளிலிருந்து தங்கம் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிப்பதினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் இன்றைய (24.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,787க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 64,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.80,550 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,05,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,787 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.70,296 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.87,870ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,78,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,069க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,802க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,787க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,059க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,792க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,582
மலேசியா - ரூ.8,078
ஓமன் - ரூ. 7,870
சவுதி ஆரேபியா - ரூ.7,744
சிங்கப்பூர் - ரூ. 7,933
அமெரிக்கா - ரூ. 7,758
கனடா - ரூ.7,922
ஆஸ்திரேலியா - ரூ.7,922
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 108 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 864 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1080 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,800 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,08,000 ஆக உள்ளது.