Gold rate.. தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. சவரனுக்கு இன்று ரூபாய் 200 உயர்வு!

Meenakshi
Dec 27, 2024,12:02 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,150க்கும், ஒரு சவரன் ரூ.56,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


கடந்த 21ம் தேதி அதிரடியாக சவரனுக்கு ரூ.480 அதிகரித்த தங்கம், அதன்பின்னர் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.26ம் தேதி சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. அதனை தொடர்ந்து சரி இன்றாவது குறையுமா என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. இந்த விலை உயர்வால் புத்தாண்டிற்கு நகை வாங்கி எண்ணியிருந்த வாடிக்கையாளர்கள் தற்போது மன வருத்தம் அடைந்து வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (27.12.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,800க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,500 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,15,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,800 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,400 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.78,000 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,80,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,165க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,815க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,155க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,675

மலேசியா - ரூ.6,921

ஓமன் - ரூ. 6,968

சவுதி ஆரேபியா - ரூ.6,848

சிங்கப்பூர் - ரூ.6,822

அமெரிக்கா - ரூ. 6,664

துபாய் - ரூ.6,867

கனடா - ரூ.6,996

ஆஸ்திரேலியா - ரூ.6,622


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் இன்றைய வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 100 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1000 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்