அரசுத் தேர்வு எழுதாமலேயே அரசு வேலை வேணுமா.. அதுவும் உங்க ஊர்லேயே.. என்னங்க சொல்றீங்க?
சென்னை: நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள 2000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்படுகின்றன.தமிழகம் முழுவதும் 34,792 நேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது.தமிழகத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு நேரடியாக விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எந்த வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், நேரடி நியமன நடைமுறையின் மூலம் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தமிழில் எழுத படிக்க மட்டும் தெரிந்திருந்தால் போதுமாம். உங்கள் ஊரிலேயே அரசுப்பணி கிடைத்து விடும்.
இந்த பணிக்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறையின் கீழ் ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணல் நடைபெறும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று தானே கேட்கிறீர்கள். இதோ... மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். சென்னையில் 33 விற்பனையாளர்கள், 315 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 58 விற்பனையாளர்கள், 13 கட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது போன்று மற்ற மாவட்டங்களிலும் ஆட்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மக்களே இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாதீர்கள்...!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்