தென்கொரிய பெண்ணை.. வலுக்கட்டாயமாக.. துன்புறுத்தி.. 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்!

Su.tha Arivalagan
Dec 20, 2023,12:16 PM IST

- மஞ்சுளா தேவி


புனே: கெல்லி என்ற தென்கொரிய பிளாக்கர் பெண்ணை வலுக்கட்டாயமாக துன்புறுத்திய வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த செயலில் ஈடுபட்ட இருவரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.


புனேவில், கெல்லி என்ற தென்ககொரிய பிளாக்கர் பெண் ஒரு மார்க்கெட் பகுதியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய இருவர் அவரை வலுக்கட்டாயமாக துன்புறுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தீபாவளிக்கு முன்பு நடந்துள்ளது. தற்போதுதான் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.


இந்த இரு இளைஞர்களையும் போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.




அந்த மார்க்கெட்டில் உள்ள இளநீர் கடைக்கு வந்த கெல்லி, அங்கு கூடிய மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அதை அப்படியே வீடியோவாகவும் பதிவு செய்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், அந்தப் பெண்ணின் கழுத்தில் அத்துமீறி கையைப் போட்டார். இன்னொருவர் வந்து அவரை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தினார். அவர்களின் செயல் எல்லை மீறுவது போல இருந்ததால், அவர்களிடமிருந்து நகர முயன்றார் கெல்லி. இருப்பினும் அந்த இருவரும் விடாமல் தொல்லை கொடுத்துள்ளனர்.


அந்த மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நேற்று அவர்களைக் கைது செய்தனர். கடந்தாண்டு மும்பையில் இதே போன்று மற்றொரு தென் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் இதேபோல துன்புறுத்தப்பட்டார். அதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.


அந்நிய நாட்டில் இருந்து வந்த பெண்களை இதுபோன்று துன்புறுத்தினால் நம் நாட்டை பற்றி என்ன நினைப்பார்கள். ஒருவர் செய்யும் தவறினால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நம் நாட்டை நம்பி வருபவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை நம்ம இளைஞர்கள் கைவிட வேண்டும்.. மாறாக நமது நாட்டுக்கு நம்பிக்கையுடன் வரும் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.