வந்துருச்சுய்யா வந்துருச்சுய்யா... வெளுத்து கட்ட போகும் கனமழை.. 15 மாவட்டங்களில்!

Su.tha Arivalagan
Oct 09, 2023,04:09 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் நாளை சென்னை உட்பட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரங்களில் குளிர்ச்சி நிலவியது. சென்னை நகரின் ஒரு சில இடங்களில்  மழை பெய்து வந்தது. தற்போது வடகிழக்கு பருவமழைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளது . 

இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட 15 மாவட்டத்தில் நாளை கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



\சென்னை,  கோவை, நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ,
கள்ளக்குறிச்சி, சேலம் ,நாமக்கல் போன்ற  மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் . திருச்சி, மதுரை, கரூர் திண்டுக்கல் மற்றும் தேனி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.