ஏப்ரல் 12 - இன்றைய நாளில் யாரை வழிபட்டால் நன்மை பெருகும் ?
இன்று ஏப்ரல் 12 புதன்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 29
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
அதிகாலை 04.15 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. காலை 11.11 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.05 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 11.11 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
சுரங்கம் அமைப்பதற்கு, கிணறு தோண்ட, கிழங்கு போன்ற காய்கறிகள் பயிரிடுவதற்கு, போர்வெல் போடுவதற்கு ஏற்ற நாள். சப்தமி திதி என்பதால் சங்கீதம் கற்றுக் கொள்ளுதல், ஆடை வாங்குதல், பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய செயல்களை செய்யலாம்.
யாரை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சப்தமி திதி என்பதால் சூரிய பகவானை வழிபட வேண்டும். சூரிய வழிபாட்டால் அரசு தொடர்பான வேலைகள், பதவி உயர்வு போன்றவை சாதகமாக முடியும்.