102 வயதில் ஓடி வந்து ஓட்டுப் போட்ட பாட்டிகள்.. வாக்களிக்கப் போகாமல் இருப்போரே இதைப் படிங்க!

Meenakshi
Apr 19, 2024,02:44 PM IST

திண்டுக்கல்: 2024ம் ஆண்டில் ஜனநாயக கடமையாற்றுவதில் முதியவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சின்னம்மாள் என்ற 102 வயது மூதாட்டி மற்றும் விழுப்புரத்தை சேர்ந்த ஜெய்துன்பீ என்ற 102 வயதுப் பாட்டி ஆகியோர் ஜனநாயக கடைமயாற்றி இளம் தலைமுறையினருக்கு மிகப் பெரிய முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.


இந்தியாவில் 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழத்தில் 39 தொகுதிகளும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு  இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.




இந்தாண்டு குறிப்பாக முதியவர்கள் வாக்கு செலுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த வயதுடையவர்களே ஓட்டு போட தயக்கம் காட்டி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 102 வயது மூதாட்டி சின்னாம்மாள் முதல் ஆளாக சென்று தனது ஜனநாயக கடமையைச் செய்தார். இந்த செயலுக்கு இணைய பக்கங்களில்  இந்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


இவரை தொடர்ந்த விழுப்புரத்தில் 102 வயது மூதாட்டி ஜெய்துன்பீ தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் ஒருவர் துணையுடன் வந்து தனது வாக்கினை செலுத்தியுள்ளார். இவரது இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தி வருகிறது.


இவர்கள் மட்டுமல்லாமல் 80 வயதுக்கு மேற்பட்ட பலரும் கூட ஆர்வத்துடன் வந்து வாக்களித்துச் சென்றுள்ளனர். வாக்களிக்கவே போகாமல் வீட்டுக்குள் பலர் முடங்கியுள்ளனர். போகும் சூழல் இருந்தும் கூட போகாமல் பலர் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த மூத்த தலைமுறையினர் மிகப் பெரிய ரோல் மாடல்களாக உள்ளனர். தயவு செய்து உங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.. அது அரசியல் சாசனம் உங்களுக்குக் கொடுத்த மிகப் பெரிய உரிமை.. மக்களே!